கொரோனா தொற்று 17 கோடியை கடந்தது; உலகெங்கும் இன்றுவரை 3,538,000 பேர் பலி!

You are currently viewing கொரோனா தொற்று 17 கோடியை கடந்தது; உலகெங்கும் இன்றுவரை 3,538,000 பேர் பலி!

உலக அளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 கோடியைக் கடந்து அதிகரித்துள்ளது.

இன்று காலை வரையான தரவுகளின் பிரகாரம் உலகெங்கும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 கோடியே 1 இலட்சத்து 53 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

இவா்களின் 15 கோடியே 19 இலட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

இன்று காலை வரையான தரவுகளின் பிரகாரம் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உலகெங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்து 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

1 கோடியே 46 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் சற்று அதிகமானவா்கள் உலகெங்கும் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனது. இவா்களில் 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கொரோனா தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments