“கொரோனா” வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை, பாதுகாப்பாக எடுத்துச்செல்லும் முற்றாக மூடப்பட்ட படுக்கைகளை நோர்வே இராணுவம் பாவனைக்கு கொண்டுவந்துள்ளது.
முற்றிலும் மூடப்பட்ட இந்த படுக்கைகளில் எடுத்துச்செல்லப்படும் “கொரோனா” நோயாளிகளிலிருந்து காற்றின் மூலமோ அல்லது வேறு வழிகளின்மூலமோ “கொரோனா” வைரஸ் அடுத்தவர்களுக்கு பரவாது எனவும் நோர்வே இராணுவம் தெரிவிக்கிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த, இராணுவத்தின் பேச்சாளர், குறித்த இந்த படுக்கையை பயன்படுத்தி, “கொரோனா” நோயாளியொருவரை உலங்குவானூர்தி மூலம் தாம் வெற்றிகரமாக இடம் மாற்றியுள்ளதாகவும், உலகலாவியரீதியில் மேற்படி முற்றாக மூடப்பட்ட படுக்கை, குழந்தைகளை தவிர்த்து பெரியவர் ஒருவருக்கு பாவிக்கப்பட்டது இதுவே முதல்தடவை எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இவ்வாறானா முற்றிலும் மூடப்பட்ட படுக்கைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறதெனவும், இதன்மூலம், கிருமித்தொற்று பயமில்லாமல், “கொரோனா” நோயாளிகளை இடம் மாற்ற முடியுமெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.