கொரோனா நோய்த்தொற்று ; சந்தேகத்தினால் அவசர சிகிச்சை பிரிவின் ஒருபகுதி மூடப்பட்டது!

  • Post author:
You are currently viewing கொரோனா நோய்த்தொற்று ; சந்தேகத்தினால் அவசர சிகிச்சை பிரிவின் ஒருபகுதி மூடப்பட்டது!

இன்று புதன்கிழமை பிற்பகல் நோயாளி ஒருவர் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்பட்ட பின்னர், ட்ரொண்ட்ஹெய்மில் ( Trondheim) உள்ள அவசர சிகிச்சை பிரிவில் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

நகராட்சியின் தொற்று தடுப்புத் தலைவர் எலி சாக்விக் (Smittevernoverlege Eli Sagvik) இதை TV 2 க்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

பரிசோதிக்கப்பட்ட நோயாளி இப்போது தனிமைப்படுத்தப்பட்டு, இரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், முடிவுகள் சில நாட்களில் தெரியவரும் என்றும் கூறப்படுகின்றது.

Adresseavisen தான் இந்த செய்தியை முதலில் தெரிவித்திருந்தது. இந்த செய்தித்தாளின்படி, அவசர பிரிவு முழுமையாக மூடப்படவில்லை என்றும் ஆனால் அது தொற்று நீக்கியால் கழுவப்படும்போது மட்டுமே பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்தது என்றும் மேலும் காத்திருப்பு அறையும் மூடப்பட்டிருந்தது என்றும் வேறு நுழைவாயில் வழியாக நோயாளிகள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோர்வேயில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 58 பேர் பரிசோதிக்கப்பட்டதாக செவ்வாயன்று FHI தெரிவித்துள்ளது.
ஆனால், அனைத்து சோதனைகளும் எதிர்மறையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள