“கொரோனா” பரவலால் நோர்வே பொருளாதாரத்தில் பின்னடைவு! முன்னேற்பாட்டு திட்டங்களை அறிவித்தார், பிரதமர்!

You are currently viewing “கொரோனா” பரவலால் நோர்வே பொருளாதாரத்தில் பின்னடைவு! முன்னேற்பாட்டு திட்டங்களை அறிவித்தார், பிரதமர்!

“கொரோனா” வைரஸ் பரம்பலால் பாதிக்கப்பட்டிருக்கும் நோர்வேயின் பொருளாதாரத்தை மீண்டும் சமநிலைக்குக்கு கொண்டுவரும் பொருட்டு, புதிய திட்டங்களை நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார் இன்று அறிவித்தார்.

தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்கள், மற்றும், பணியாட்களை கணிசமானளவு குறைத்திருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்குநர்கள், பொருளாதார பின்னடைவை சந்திப்பதை மட்டுப்படுத்தும் விதத்தில், வரிக்குறைப்பு மற்றும், அரசுக்கான வரிகளை செலுத்துவதை ஒத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பொருளாதார தேவைகளை அதிகமாக எதிர்நோக்கியிருக்கும் நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டிவீதத்தில் கடன்களை வழங்கும் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. இவ்வாறான சலுகைகளின்மூலம், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தொழில் வழங்குநர்களும், நிறுவனங்களும் தப்பிப்பிழைத்துக்கொள்ள வழிவகை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே நேரம், நோர்வேயின் தலைமை வங்கியான “Norges Bank” வட்டிவீதத்தினை கணிசமான அளவுக்கு குறைத்திருப்பதால், சரிந்துபோயிருந்த நோர்வேயின் பங்குச்சந்தை மீண்டும் உயர்வடைய ஆரம்பித்துள்ளது. நோர்வேயின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான “DnB” வங்கியும் வட்டிவீதங்களை குறித்திருப்பதாக அறிவித்துள்ளது.

செய்தி மேம்பாடு:

நோர்வேயின் பிரபல வங்கிகளில் ஒன்றான “Nordea” வாங்கி, தனது வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடன்களுக்கான மாதாந்த தொகையை செலுத்துவதிலிருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முன்வந்திருக்கிறது. எனினும், மாதாந்த வட்டித்தொகையை செலுத்தவேண்டும் என்பது முக்கியமானது.

பகிர்ந்துகொள்ள