“கொரோனா” பரவலால் பணியிடங்களிலிருந்து இடைநிறுத்தப்படுபவர்களுக்கு 15 நாட்களுக்கு 100 சதவிகித வேதனம் வழங்க ஆவன செய்யப்படுமென அரசு அறிவித்துள்ளது.
மேற்படி முடிவுக்கு நோர்வே நாடாளுமன்றத்தில் பரவலான ஆதரவு இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நட்டமடையும் நிறுவனங்களின் நட்டத்தின் பெரும்பகுதியை அரசே பொறுப்பேற்கும் என்றும், கட்டாய விடுப்பில் பணியிடங்களிலிருந்து இடைநிறுத்தப்படுபவர்களுக்கு ஆகக்குறைந்தது 15 நாட்களுக்கு 100 சதவிகித வேதனத்தை வழங்கும் முடிவு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படுமெனவும் அரசு தெரிவித்துள்ளது.