“கொரோனா” வைரஸின் தொற்றுதலை கண்டறிவதற்கான புதியவகை இயந்திரங்கள் நோர்வேயில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
நாளொன்றுக்கு 2800 பேரை பரிசோதனை செய்யக்கூடியளவிற்கு செயல்த்திறன் கொண்ட சுவிஸ் தயாரிப்பான இவ்வியந்திரங்கள் முதற்கட்டமாக, ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன.
“கொரோனா” தொற்று இருப்பதை கண்டறிவதற்காக மிகக்குறைந்த நேரத்தையே பாவிக்கும் இவ்வியந்திரங்கள், பெரும்பாலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடியவை எனவும், குறுகிய நேரத்தில் அதிகளவான பரிசோதனைகளை நடத்துவதோடு, மிக விரைவாகவே பரிசோதனைகளுக்கான பதில்களையும் வழங்கிவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முதற்கட்டமாக, சுவாச சிக்கல்கலால் அவதிப்படுபவர்களுக்கும், அவர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கும் சுகாதாரத்துறையை சேர்ந்த பணியாளர்களும் இவ்வியந்திரம் மூலம் பரிசோதிக்கப்படுவார்கள் எனவும், காலக்கிரமத்தில் நாட்டிலுள்ள ஏனைய பிரதான வைத்தியசாலைகளுக்கு இவ்வியந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் சுகாதார அமைச்சர் “Bent Høye” தெரிவித்துள்ளார்.