கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை பின் தள்ளியது பிருத்தானியா!

  • Post author:
You are currently viewing கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை பின் தள்ளியது பிருத்தானியா!

ஐரோப்பிய நாடுகளில், கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இத்தாலியை பின் தள்ளி பிருத்தானியா முதல் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான பிருத்தானியாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதித்த ஐரோப்பிய நாடுகளில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி பிருத்தானியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

பிருத்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியானதை தொடர்ந்து, ஐரோப்பா கண்டத்தில், கொரோனாவுக்கு அதிக மக்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிருத்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த வைரசால் 2,50,000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (Johns Hopkins) பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பிருத்தானிய சுகாதார அமைச்சகம் 693 புதிய கொரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளது. பிருத்தானியாவில் கொரோனா தோற்றால் இதுவரை 29,427 பேர் இறந்துள்ளனர்.

அதுபோல் கடந்த 24 மணி நேரத்தில், இத்தாலி 236 புதிய கொரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளது, இத்தாலியில் இதுவரை மொத்தம் 29,315 பேர் இறந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள