“கொரோனா” பாதிப்பு தொடர்பில் இதுவரை எதையும் பதிவு செய்யாத நாடாக “மொன்ரநேக்ரோ” இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ் பரவல் அவதானிக்கப்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் கூடும் அத்தனைஇடங்களையும் இந்நாடு மூடுவதாகவும், வெளிநாட்டவர்கள் யாரும் நட்டுக்குள் வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அங்காடிகளில் ஒரே தேரத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
யூகோஸ்லாவிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனிநாடாக மாறிய இந்தாடு ஆறு இலட்சம்குடிமக்களை கொண்டுள்ளது.
சீனாவில் “கொரோனா” தாக்கம் அதிகரித்தபோதே முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றஆரம்பித்த “மொன்ரநேக்ரோ”, அப்போதிலிருந்தே சீனர்கள் நாட்டுக்குள் வருவதை தடைசெய்ததோடு, நாட்டில் அனைத்து எல்லைகளிலும் கடுமையான சோதனை நடவடிக்கைகளைமுடுக்கி விட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“மொன்ரநேக்ரோ” வுடன் நில எல்லைகளை கொண்டிருக்கும் நாடுகளான செர்பியா, அல்பானியா, பொஸ்னியா – ஹெர்ஸகோவீனா ஆகிய நாடுகளில் “கொரோனா” பாதிப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.