நியூசிலாந்தில் கடைசியாக கடந்த மாதம் 22ம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்போது குணடைந்துள்ளார். குறிப்பிட்ட நபர், திங்களன்று 48 மணிநேரம் கொரோனா அறிகுறி இல்லாத நிலையில் ஆரோக்கியமடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.
ஒரு பக்கம் பல நாடுகளில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.
நியூசிலாந்தில் மொத்தமே 1,500 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 22 பேர் உயிரிழந்தனர். கொரோனாவை ஒழிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரதமர் “Jacinda Ardern” மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புதிய தொற்றாளர்கள் இல்லாத நிலையிலும் நாட்டின் எல்லை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவத் தொடங்கியதுமே பொது முடக்கத்தை அறிவித்து பரிசோதனைகளை அதிகரித்து தற்போது தொற்றை முழுமையாக நியூசிலாந்து கட்டுப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.