“கொரோனா” பிடியில் பிரான்ஸ் விமானம் தாங்கிக்கப்பல்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing “கொரோனா” பிடியில் பிரான்ஸ் விமானம் தாங்கிக்கப்பல்! “கொரோனா” அதிர்வுகள்!!

பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கிக்கப்பலான “Charles De Gaulle” வில், 50 பணியாளர்கள் “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1800 பணியாளர்களை கொண்ட மேற்படி கப்பலில், “கொரோனா” தொற்று ஏற்பட்டுள்ள்ளதாக பிரெஞ்சு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக, “Reuters / ரொய்ட்டர்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி கப்பலில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரப்பணியாளர் குழுவொன்று அவசரமாக கப்பலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படும் நிலை தோன்றியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கப்பலின் 3 மாலுமிகள் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள