பிருத்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) இப்பொழுது கொரோனா தீவிர சிகிச்சை பெறவில்லை என்று Reuters எழுதியுள்ளது. மேலதிக சிகிச்சையின் மூலம் அவரது உடல் நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
“அவர் மிகவும் தைரியமானவர்” என்று Downing Street செய்தித் தொடர்பாளர் ஒருவர் Sky Newsக்கு கூறியுள்ளார்.
கடந்த திங்களன்று, லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் (St. Thomas) மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட போரிஸ் ஜான்சன் நிலைமை மேம்படும் வரை மருத்துவமனையில் தொடர்ந்து மேலதிக சிகிச்சை பெறுவார்.
ஜான்சனின் மருத்துவமனை அனுமதியைத் தொடர்ந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் (Dominic Raab) பிருத்தானிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகக்கது.
மேலதிக தகவல்: Dagbladet