கொரோனா தொற்றுநோய் தொடங்கிய சீன நகரமான வுஹானில், அங்கு வசிப்பவர்கள் வீடுகளில் தங்கி இருந்து ஒரு புதிய நோய்த்தொற்று அலைக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.
சீன நகரமான வுஹானில் கொரோனா வைரஸ் புத்துயிர் பெறுவதற்கான ஆபத்து அதிகம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் Wang Zhongli கூறியுள்ளார்.
ஆகவே, வுஹானில் வசிக்கும் சுமார் 11 மில்லியன் குடியிருப்பாளர்கள், நோய்த்தொற்று நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமைப்படுத்தும்படி, முடிந்தால் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கும் படியும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
New York Times கருத்துப்படி, வுஹானில் புதன்கிழமை மொத்தம் 50,007 உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் இருந்தன, ஆனால் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது.
அதேபோல் The Guardian கருத்துப்படி, வெள்ளிக்கிழமை 31 புதிய தொற்று பதிவுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்: Dagbladet