காவல்துறையினரால் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் 20 ஆயிரம் பேர் ஒன்று கூடிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இதனால் காவல்துறையினருக்கும் எதிர்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் காவல்துறையின் காவலில் இருந்த ஒரு கறுப்பினத்தவர் மரணமடைந்ததைச் சுட்டிக்காட்டியே 20,000 பேர் போராட்டத்தில் குதித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க எதிர்ப்பு இயக்கத்தின் முழக்கங்களைப் பயன்படுத்தி அடாமா ட்ரொரேவுக்கு நீதி கோரினர்,
வடக்கு பாரிஸில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே பிற்பகலில் போராட்டம் தொடங்கியது. பொருள்களால் காவல்துறையினரை நோக்கி வீசப்படுவதற்கு முன்னர், காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கூட்டத்தை கலைத்தனர்.