கொரோனா வீழ்ச்சி : 90 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்!

  • Post author:
You are currently viewing கொரோனா வீழ்ச்சி : 90 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்!

கடந்த வாரதிற்கான வாராந்த அறிக்கையில், அனைத்து கோவிட் -19 நோயாளிகளில், 90 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளதாக FHI மதிப்பிட்டுள்ளது. அதாவது, நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பின்னரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலும், உயிருடன் இருப்பவர்களும் குணமடைந்தோர் என்ற வரையறைக்குள் அடங்குவார்கள்.

இதுவரை, நோர்வேயில் 182,285 பேர் கொரோனா வைரஸுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 16,572 பேர் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்டவர்களில், 1.5 விழுக்காடு பேரில் தொற்றுநோய் கண்டறியப்பட்டது.

பரிசோதிக்கப்பட்டவர்களிடையே தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை, பல வாரங்களாக குறைந்துள்ளது என்று FHI தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரத்தில், தீவிர சிகிச்சை பிரிவில் கோவிட் -19 தொற்றுடன் மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், புதிய கொரோனா தொற்று எண்ணிக்கையில் சரிவு தொடரும் என்றும், கொரோனா தோற்றால் இதுவரை ஒரு விழுக்காடு மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் FHI மதிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள