வெனிசுலாவில் (Venezuela) மதுபான ஆலை ஒன்று மதுவுக்குப் பதிலாக கிருமி நாசினியைத் தயாரித்து வழங்கி வருகிறது. “மது தயாரிப்பை 60 சதவீதம் வரை குறைத்து, அதற்கு பதிலாக கிருமி நாசினியை தயாரித்து வருகிறது”
கொரோனாவை தடுக்க “Alcohol” அடங்கிய கிருமி நாசினியை கொண்டு கைகழுவ வேண்டும் என்பது வலியுறுத்தப்படும் சூழலில், வெனிசுலாவில் இத்தகைய கிருமி நாசினிகள் கிடைப்பது அரிதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன.
இந்நிலையில் வெனிசுலாவின் முன்னணி மது ஏற்றுமதி நிறுவனமான “ரம் சான்டா தெரெசா” (Rum Santa Teresa) மது தயாரிப்பை 60 சதவீதம் வரை குறைத்து, அதற்கு பதிலாக கிருமி நாசினியை தயாரித்து வருகிறது.
இங்கு 24 மணி நேரமும் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 3,000 போத்தல்கள் கிருமிநாசினியை தயாரிக்கின்றனர். இவற்றை மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது “Rum Santa Teresa”நிறுவனம்.