உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 50 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது!
கொரோனா வைரசால் இதுவரை 2814 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் இருந்து வைரஸ் பரவத் தொடங்கியது. இது தற்போது நாட்டில் மொத்தம் 78,514 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது உலகில் 50 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் 96, தாய்லாந்தில் 40, தைவான் 32, பஹ்ரைன் 26, குவைத், ஆஸ்திரேலியா 23, மலேசியா 22, பிரான்ஸ் 18, ஜெர்மனி 18, இந்தியா-3, பிரேசில் 1, எகிப்து 1, ஜார்ஜியா 1 உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த 82,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.