இலங்கையின் வெளியேற்றம் – கனடா, பிரித்தானியா அதிருப்தி!

You are currently viewing இலங்கையின் வெளியேற்றம் – கனடா, பிரித்தானியா அதிருப்தி!

2015ம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமது, இலங்கையின் தீர்மானம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும் அவர் இலங்கையை வலியுறுத்தினார்.

அதேவேளை, இலங்கை எடுத்துள்ள தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் நடவடிக்கையினால் கனடா கடும் ஏமாற்றமடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் நடவடிக்கை எடுக்க கனடா இலங்கைக்கு அழைப்பு விடுத்ததுடன், வளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள