கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, குறுகிய நேர அறிவிப்பில் ஸ்வீடன் அரச மாளிகை அதன் பிரதிநிதித்துவ விருந்தை ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த முடிவு இன்று எடுக்கப்பட்டது என்று தகவல் தொடர்பு மேலாளர் Margareta Thorgren கூறியுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருந்த இந்த இரவு உணவு விருந்திற்கு 150 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்வீடிஷ் பொது சுகாதார ஆணையம் மற்றும் ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதனால் அரச குடும்பத்தின் திட்டமிட்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் அபாயத்தில் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.