இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்து அரசையும், மருத்துவத்துறையையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.
சீனாவில் இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 170 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 5,974 பேர் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. சீனாவிலும், உலக அளவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதே தங்களின் உயர்ந்தபட்ச நோக்கம் ஆகும் என அந்த அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.