சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1765 ஆக உயர்ந்துள்ளது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 1933 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.