தலைமுடி வெட்ட, மற்றும் ஆடம்பர விருந்து, கழியாட்டங்களுக்காக, STOCKHOLM நோக்கி குவியும் ஆடம்பர சுற்றுலாப் பயணிகள்!
“Stockholm” மற்றும் “Malmö” போன்ற நகரங்களில் உள்ள சிகையலங்கார நிபுணர்கள் “ஐரோப்பா முழுவதிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்கள், தலைமுடி வெட்ட, பொது இடங்களில் உணவு உண்ண மற்றும் கழியாட்ட விருந்துக்காக வருகின்றார்கள்” என்று கூறியுள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுவீடன் வேறு முறையான வழிமுறையை கையாள்கின்றது என்ற கூற்றுக்கு, கடந்த வெள்ளி அன்று ஸ்வீடனின் வெளியுறவு மந்திரி “Anne Linde” ஆட்சேபனை தெரிவித்திருந்தார். ‘ஸ்வீடனில் வாழ்க்கை இயல்பாகவே செல்கிறது’ என்பது ஒரு கட்டுக்கதை என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
ஸ்வீடனின் தளர்வான தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், இப்போது பல, பணம் படைத்தவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பகுதி மூடப்பட்டிருக்கும் நேரத்தில் சுவீடனில் கடைகளை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
Aftonbladet பத்திரிகையின் கூற்றுப்படி, கூடுதலாக பணக்கார பெண்களே இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.
ஆனால், ஸ்வீடனுக்கு பயணம் செய்வது இப்பொழுது மலிவானது அல்ல. சிகையலங்கார நிபுணர் சோபியா(Sofia) என்பவர் கூறுகையில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் தன்னிடம் இருப்பதாகவும், அவர் விமான சீட்டுக்கு 1800 யூரோக்களை செலுத்தி ஸ்வீடன் வந்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: TV2