தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தாயாரது இல்லத்தின் முன்னால் இனவாதிகள் நின்று கூச்சலிடுகிறார்கள்…
ஏன்…?
தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றி, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை திரும்பவும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடினார்
திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
குருந்தூர் மலையில் பல தூற்றாண்டுகளாக சைவர்கள் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஆலயத்தை இடித்தழித்துவிட்டு, அங்கு சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டமையை எதிர்த்து போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் சைவ மரபுப்படி பொங்கல் வைப்பதற்கான உரிமைக்காக போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலை ஆதிசிவனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வில், நீதிமன்ற அனுமதியை அவமதிக்கும் வகையில், அங்கு வந்து பொங்கலை குழப்ப முனைந்த, குருந்தூர் மலை சட்டவிரோத விகாராதிபதியை எதிர்த்து போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
நீதிமன்றம் கொடுத்த ஒப்புதலை கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொங்கல் இடத்திற்கு வந்து, அனாவசியமான கட்டுப்பாடுகளை விதித்து, பொங்கலை இழிவு படுத்த முனைந்த தொல்லியல் திணைக்களத்தை எதிர்த்து போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்திருக்கக்கூடிய இடங்களை தனியே சிங்கள பெளத்த இடங்களாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
தமிழ்மக்களால் 36 ஆண்டுகளுக்கு முன்னரேயே நிராகரிக்கப்பட்ட, இப்போது அதிகாரங்கள் பறிக்கப்பட்டு நலிவடைந்து போயுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ்மக்கள் தமக்கான தீர்வாக ஏற்றுக்கொண்டால், தமிழர்களுடைய எதிர்காலம் ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட்டு, தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தர குடிமக்களாக ஆகிவிடுவார்கள் என்பதால் அதை தடுக்க போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
இலங்கை – இந்திய நலன்களை மட்டுமே முன்னிறுத்தி, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் 13 ஐ ஏற்றுக்கொள்ளுவதற்கு, ஏனைய தமிழத்தரப்புக்களை ஒத்துக்கொள்ள வைத்த இலங்கை – இந்திய தரப்புக்களின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படாமல், தமிழர்களுக்காக போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
சமஷ்டி முறையிலான, திரும்பப்பெறப்பட முடியாத, நியாயமான அதிகார பகிர்வை கொண்ட தீர்வு முறையே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வாக இருக்கு முடியும் என்பதற்காக போராடினார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
இதனாலேயே குறிவைக்கப்படுகிறார் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
தமது சூழ்ச்சிகள் நிறைவேறுவதற்கு இலங்கை – இந்திய தரப்புக்களுக்கு இருக்கும் ஒரே இடையூறு திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
அரசியலில் எதிர்க்க முடியாத அவரை, கொலை செய்ய முயன்றும், சிறையில் தள்ளியும் அவரது அரசியல் பாய்ச்சலை கட்டுப்படுத்த முனைத்து தோற்ற இலங்கை – இந்திய தரப்புகள், இப்போது இனவாதத்தை அவர் மீது வெளிப்படையாகவே ஏவி்விடுகின்றன…
தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீது இனவாதம் கக்கப்படுவதை தார்மீகமாகவேனும் எதிர்க்க விரும்பாமல் அரசியல் கயமையோடு கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஏனைய தமிழ்க்கட்சிகள்…
எனினும், திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அரசியல் தமிழ் மக்களின் இருப்புக்கானது என்பதை புரிந்து கொண்டு அவரை அரணாக காத்துநிற்கும் மக்கள் மட்டுமே இன்று அவருக்கான உறுதியான பாதுகாப்பு…