கொழும்பில் இருவர் மர்மமான முறையில் பலி!

You are currently viewing கொழும்பில் இருவர் மர்மமான முறையில் பலி!

கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மாடி வீடொன்றின் மேல்மாடி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆண் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அந்த அறையில் அவருடன் தங்கியிருந்த பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் அந்த அறைக்கு 13ஆம் திகதி வந்ததாகவும், வீட்டு உரிமையாளரிடம், குறித்த பெண் பணிப்பெண் எனவும், ஆண் கூலித் தொழிலாளி எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குடியேறி 2 நாட்கள் கழித்து இருவரும் உயிரிழந்துள்ளனர்

களுபோவில வைத்தியசாலை வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஹம்சர் குமார் என்ற 26 வயதான இளைஞன் மற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலசுப்ரமணியம் யோகேஸ்வரி என்ற 37 வயதான பெண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments