கோட்டாவின் உருவபொம்மையை கொளுத்தி கொண்டாட்டம்!

You are currently viewing கோட்டாவின் உருவபொம்மையை கொளுத்தி கொண்டாட்டம்!

மட்டக்களப்பு – செங்கலடி கோட்டா கோ கம போராட்டக் களத்தில் கேக் வெட்டி, வெடிக்கொள்ளுத்தி கோட்டாபய ராஜபக்ஷவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்கள், கோட்டா கோ கம போராட்ட இடத்தில் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதை அடுத்து செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தலைமையில் தமது வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினர்.

இதேவேளை தமது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக கபுடா என வாசகம் பொறிக்கப்பட்ட கேக் ஒன்றையும் வெட்டி போராட்ட இடத்தில் பரிமாறிக் கொண்டதுடன் பொது மக்களுக்கு குளிர்பானமும் வழங்கினர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply