கோட்டா மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்: ரணிலிடம் சஜித் வலியுறுத்து!

You are currently viewing கோட்டா மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்: ரணிலிடம் சஜித் வலியுறுத்து!

கோட்டாபய ராஜபக்சவும் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகள் அவர்கள் இருவரையும் தூக்கிலிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்இ இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல்.

பிரதான சூத்திரதாரிகள்
இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என்று சனல் 4 தொலைக்காட்சி அடையாளம் காட்டியுள்ள கோட்டாபயவும் பிள்ளையானும் மறுப்பு அறிக்கைகளை விட்டுத் தப்ப முயல்கின்றனர்.

அதேவேளை, சனல் 4 தெலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழுவும், அரசு நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் கோட்டாபயவையும், பிள்ளையானையும் காப்பாற்றுவதற்கான திட்டங்களாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் இன்று சர்வதேச சமூகத்தின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என்று சனல் 4 தொலைக்காட்சி அடையாளம் காட்டியுள்ள கோட்டாபயவும்இ பிள்ளையானும் மறுப்பு அறிக்கைகளை விட்டுத் தப்ப முயல்கின்றனர்.

அதேவேளை, சனல் 4 தெலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழுவும், அரசு நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் கோட்டாபயவையும், பிள்ளையானையும் காப்பாற்றுவதற்கான திட்டங்களாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் இன்று சர்வதேச சமூகத்தின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எனவே, இது தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி இடமளிக்க வேண்டும். அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க ஜனாதிபதி முயற்சிக்கக் கூடாது.

கோட்டாபய, பிள்ளையான் மட்டுமல்ல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கும் உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments