கோத்தபாய உட்பட 4 போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு!

You are currently viewing கோத்தபாய உட்பட 4 போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு!

சிறிலங்காவின் தற்கால சனாதிபதியும் தமிழினப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியுமான இனப்படுகொலைாளி கோத்தபாய ராசபக்ச மற்றும் சிறிலங்காவின் தற்கால பாதுகாப்பு அமைச்சர் இனப்படுகொலையாளி கமால் குணரத்தினே, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியும் போர்குற்றவாளியுமான ஜெகத் ஜெயசூரிய, சிசிர மென்டிஸ் முன்னாள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணமல்ஆக்க்பபட்டதிலும் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதிலும் மிக முக்கிய பங்காற்றியவர்.

கோத்தபாய உட்பட 4 போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு! 1

இவர்கள் மீது இவர்களால் பாதிக்கப்பட்ட 200 ஈழத்தமிழர்கள் சார்பில் Global Rights Compliance என்ற அமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளி ஒன்றை பாய்ச்சி இருப்பது குறிப்பிடத்தக்கது. கோத்தபாய வரும் நவம்பர் 1 திகதி ஸ்கொட்லாந்தில் நடைபெறவிருக்கும் United Nations Climate Change Conference 2021 வருகை தருவதை இட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது சிங்கள தரப்புக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாய உட்பட 4 போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு! 2

இனப்படுகொலையாளி கோத்தபாய    உட்பட பல சிரேஸ்ட அதிகாரிகளை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என கோரும்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டசமர்ப்பணத்தை குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் என்ற சர்வதேச அமைப்பு சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பிரிட்டனில் வாழும் 200  ஈழத்தமிழர்களின் சார்பில் இந்த மனுவை குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply