யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் முப்படையினரும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கல்லுாரியின் முன்னாள் இரானுவம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறையில் சென்ற முப்படையினரும் மீண்டும் படை முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கோப்பாய் ஆசிரியர் கல்லுாரியை இரானுவத்தினர் கைவசப்படுத்தியுள்ளனர்.
இந் நிலையில் குறித்த கல்லுாரியின் முன்பாக இராணுவம் மற்றும் பொலிஸார் இன்று காலை பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
