கொவிட் 19 தொற்று காரணமாக ஒரே தினத்தில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்த முதல் நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. 210 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 16 இலட்சத்து 97 ஆயிரத்து 82 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களுள், 3 இலட்சத்து 76 ஆயிரத்து 106 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
உலகளவில் இத்தாலியில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 18 ஆயிரத்து 849 பேர் அங்கு உயிரிழந்துடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 577 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், அமெரிக்காவில் இறப்புகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 18 ஆயிரத்து 686 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 3 புதிய மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்ரக 5 இலட்சத்து ஆயிரத்து 648 ஆக உள்ள நிலையில், 33 ஆயிரத்து 82 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்பெய்னில் 634 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்ரக 16 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது. ஃப்ரான்ஸில் 13 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளதுடன், 987 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரித்தானியாவில் 8 ஆயிரத்து 985 பேரும், ஈரானில் 4 ஆயிரத்து 232 பேரும், பெல்ஜியத்தி;ல் 3 ஆயிரத்து 19 பேரும், ஜேர்மனியில் 2 ஆயிரத்து 767 பேரும், கனடாவில் 569 பேரும், இந்தியாவில் 206 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கல் நடவடிக்கைகளை நாடுகள் மிக விரைவாக தளர்த்துவது நோய்த் தொற்றுக்களில் கொடிய எழுச்சியை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் இடம்பெற்ற செய்திளார் மாநாட்டில் கருத்துரைத்தபோது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரொஸ் எதனம் கெப்றியேஸஸ் வுநனசழள யுனாயழெஅ புhநடிசநலநளரள இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார தாக்கத்துடன் போராடும்போது, கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள ஸ்பெய்ன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சில நடவடிக்கைகளை தளர்த்திக்கொண்டிருக்கும் அதேவேளை, முடக்கல் பணிகளையும் தொடர்கின்றன. கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான உத்திகளை உருவாக்க உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.
ஆனால் இது மிக விரைவாக செய்யப்படக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாடுகளை மிக விரைவாக தளர்த்துவது ஒரு கொடிய எழுச்சிக்கு வழிவகுக்கும். எனவே, சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால், செல்லும் வழி ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்