கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியது!

You are currently viewing கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,25,76,966 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,91,97,975 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 61 ஆயிரத்து 531 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,17,460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93,262 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி – 70,39,500

பிரான்ஸ் – 69,94,319

ஈரான் – 55,33,520

அர்ஜெண்டினா- 52,50,402

கொலம்பியா – 49,51,675

ஸ்பெயின் – 49,46,601

இத்தாலி – 46,60,314

இந்தோனேசியா- 42,08,013

ஜெர்மனி – 42,06,257

மெக்சிகோ – 36,28,812

பகிர்ந்துகொள்ள

Leave a Reply