கோவிட்-19: பிரேசிலில் அதிகரிக்கும் மரண ஓலங்கள்!!

You are currently viewing கோவிட்-19: பிரேசிலில் அதிகரிக்கும் மரண ஓலங்கள்!!

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வைரஸ் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 81,574 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 1 கோடியே 78 லட்சத்து 83 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 2,247 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,00,868 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,61,83,849 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 11,99,033 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply