சக்கோட்டை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 35 கிலோ கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி படகு மீட்பு!

You are currently viewing சக்கோட்டை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 35 கிலோ கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி படகு மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 35 கிலோ கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து எமது பிரதேச செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சக்கோட்டை பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து இன்று (ஒக்-13) அதிகாலை அங்கு இராணுவத்தினர் சென்றபோது 35 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மீன்பிடி படகு ஒன்றும் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் தப்பியோடிய நிலையில், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கபட்டவை பருத்தித்துறை பொலிஸாரிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பட்டு வருவதாகவும் எமது பிரதேச செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply