சஜித்தின் பேரணி மீது நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்!

You are currently viewing சஜித்தின் பேரணி மீது நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு மாநகர சபையை அண்மித்துள்ள பல பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரணியில் பங்கேற்போர் டீன்ஸ் வீதி, டி.பி. ஜயா மாவத்தை, தொழில்நுட்ப சந்தி உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 16 பேர் மற்றும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள 500க்கும் மேற்பட்டோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்களின் கருத்துரிமைக்கு இடையூறு விளைவிக்காமல் கருத்து தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பி.டி.சிறீசேனா மைதானம் மற்றும் ஹைட் பார்க் மைதானம் பாதுகாப்பாக ஒதுக்கப்படும். அந்த மைதானங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments