சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு தங்கியிருந்த 17 பேர் கைது!

You are currently viewing சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு தங்கியிருந்த 17 பேர் கைது!

மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள்  8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று புதன்கிழமை (15) இரவு  கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

இரகசியமாக கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக சிறீலங்கா காவற்துறை குழுவினர் சுற்றிவளைத்தனர்.

இதன்போது சட்டவிரோத ஆள்கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம்  அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்துவந்து மட்டக்களப்பு  சுவிஸ்கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்கவைத்துள்ளதாக  சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில்  3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவிபுரிந்துவந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோச பக்கற்கள், பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டுள்ளார்கள்.

இவர்களை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply