சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று பதற்றம்: வேலன் சுவாமி உட்பட 5 பேர் கைது!

You are currently viewing சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று பதற்றம்: வேலன் சுவாமி உட்பட 5 பேர் கைது!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும், விகாராதிபதிக்கு கௌரவப் பதவி வழங்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தும் இன்று (21) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று பதற்றம்: வேலன் சுவாமி உட்பட 5 பேர் கைது! 1

கைது செய்யப்பட்டவர்கள்:

இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து பின்வருவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்:

1. வேலன் சுவாமி (சிவில் சமூக செயற்பாட்டாளர்)

2. தியாகராஜா நிரோஷ் (வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்)

3. வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மூவர்.

சம்பவத்தின் பின்னணி:

சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தையிட்டி விகாரைக்கு முன்பாக, “இது ஒரு சட்டவிரோதமான விகாரை” என மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை நாட்டுவதற்கு வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன், விகாராதிபதிக்கு கௌரவப் பதவி வழங்கப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பதற்றமான சூழல்:

போராட்டக்காரர்கள் விகாரை நோக்கி முன்னேற முயன்றபோது, அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் தடையை ஏற்படுத்தினர். இதன்போது ஏற்பட்ட மோதல் நிலைமையைத் தொடர்ந்து, போராட்டத்தை வழிநடத்திய முக்கியஸ்தர்கள் பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பலவந்தமாகக் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கைது நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ஏனைய போராட்டக்காரர்கள் தொடர்ந்து அந்த இடத்திலேயே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery

பகிர்ந்துகொள்ள

Leave a Reply