சமத்துவத்துடன் வாழ்வதை உறுதி செய்வதில் இந்திய மத்திய அரசு!!

You are currently viewing சமத்துவத்துடன் வாழ்வதை உறுதி செய்வதில் இந்திய மத்திய அரசு!!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற பெருமை தனக்குள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தமிழர்கள் நீதி, கௌரவம், சமத்துவத்துடன் வாழ்வதை உறுதி செய்வதில் இந்திய மத்திய அரசு உறுதியாகவுள்ளது எனவும் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்ற இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, இலங்கையின் தமிழ்ச் சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோரின் நலன்கள், அபிலாஷைகளை இந்திய அரசாங்கம் என்றும் கருத்தில் எடுத்துள்ளது என்றார்.

‘இலங்கையில் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நாங்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்து வருகின்றோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

‘மீனவர்களின் உரிமையுடன் கூடிய நலன்களை, மத்திய அரசாங்கம் எப்போதும் பாதுகாக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டபோதெல்லாம், அவர்களைக் கூடிய விரைவில் விடுதலை செய்யப்படுவதை, நாங்கள் உறுதி செய்துள்ளோம். அத்துடன், எனது பதவிக்காலத்தில் 16,000 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது, இந்திய மீனவர்கள் எவரும் இலங்கை சிறையில் இல்லை’ என்றார்.

பகிர்ந்துகொள்ள