ஒரே கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருகின்ற நிலையில் எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை என்ற சம்பந்தனின் கருத்து அப்பட்டமான பொய் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோரதராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியத்தின் பேரில் சொல்லிக் கொண்டு, அரசியல் நடத்தும் தலைவர்கள் உண்மையான அக்கறையுடன் செய்யப்படுவதில்லை என்றும் இவர்கள் ஒருபோதும் ஒன்றிணைய மாட்டார்கள் என்றும் எஸ்.வினோரதராதலிங்கம் தெரிவித்தார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் உட்கட்சி பூசல்கள் மக்களுக்கும் தமக்கும் இடையில் பாரிய இடைவெளியை கொண்டு வந்திருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்சியோ அல்லது மக்களிடம் இருந்து பிரிந்து செயற்பட்டால் அது எல்லோரையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப் போன தலைவர்கள் என்பதனால் அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என்றார்.