தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இரா.சம்பந்தனுக்கு தற்போது 90 வயதினை எட்டியுள்ள நிலையில் வயோதிபம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்திருந்தார்.
எனினும் அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுடனான இனப்பிரச்சனை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் அவரின் வயோதிபம் தொடர்பான நிலையில் அவதானிக்க முடிந்திருந்தது.
இந்நிலையில் தற்போது வைத்தியசாலை ஒன்றில் அவசர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.