சர்ச்சையில் சிக்கும் நோர்வே தலைநகரின் வாடகை வண்டிகளின் (Taxi) சாரதிகள்!

You are currently viewing சர்ச்சையில் சிக்கும் நோர்வே தலைநகரின் வாடகை வண்டிகளின் (Taxi) சாரதிகள்!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், வாடகை வண்டிகளில் (Taxi) இரவு நேரங்களில் பயணம் செய்த சிலர் மீது, வாடகை வண்டிகளின் சாரதிகளால் பாலியல் பலாத்காரம் முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இது விடயம் தொடர்பாக பொதுவெளியில் பேசுவதற்கு முன்வந்துள்ள இரு பெண்களும், ஒரு ஆணும், பின்னிரவு நேரத்தில் வாடகை வாகனத்தில் தாம் பயணித்தபோது அந்தந்த வண்டிகளின் சாரதிகள் தம்மோடு தகாத முறையில் நடக்க முனைந்ததாக தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்து நோர்வேயின் வாடகை வண்டி நிறுவனங்களின் கூட்டமைப்பு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட சாரதியை பணிநீக்கம் செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடகங்களில் இச்செய்தி வெளியாகியதையடுத்து, தலைநகர் ஒஸ்லோவை மையமாக கொண்டு இயங்கும் வாடகை வண்டி நிறுவனங்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளநிலையில், இதுகுறித்து கருத்துரைத்துள்ள நோர்வேயின் வாடகை வண்டி நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் “Hanne Skåle Thowsen” தெரிவிக்கும்போது, மேற்படி குற்றச்சாட்டுக்கள் கவலையளிப்பதாகவும், வாடகை வண்டிகளின் சாரதிகளாக கடமையாற்றுபவர்கள், தொழில் தர்மத்தை மீறும்போது அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது வழமையாக இருந்து வருவதாகவும், எனினும் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சகம் கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply