சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

You are currently viewing சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.” என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவுக்கான இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே ஜோன் பிசர் தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

“இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எவரும் ஏமாறக்கூடாது. போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள