பிரெஞ்சு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 09/09/2021 இன்று வியாழக்கிழமை காலை Morre நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Mamirolle, Étalan, Premiers-Sapins, Pontarlier, Bulle, Frasne, Équevillon, Champagnole, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Champagnole, நகரசபையுடன் ஒன்பதாவது நாள் நிறைவடைந்தது.
சில நகரசபைகள் குளிர்பாணங்கள் சிற்றுண்டிகள் வழங்கி மிகவும் அன்போடு வரவேற்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தொடர்பாக விரிவாக தெரிந்து கொண்டனர். மேலும் தமிழ்மக்களுக்கு ஆதரவான தீர்மானம் விரைவில் நிறைவேற்ற ஒழுங்குகள்செய்வதாக உறுதி அளித்தார்கள்.
மேலும் சில பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு நீதிக்கான பயணம் தொடர்பாக முழுவிபரமும் தெரிந்து கொண்டனர். தங்களால் முடிந்தவரை இந்தச் செய்தியை
வெளிக்கொண்டுவருவோம் என்றும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துகளும் தெரிவித்தனர்.