நோர்வேயிடம் அடைக்கலம் கோரும் ஆப்கானியர்கள்!

You are currently viewing நோர்வேயிடம் அடைக்கலம் கோரும் ஆப்கானியர்கள்!

ஆப்கானிஸ்தானை விட்டு, அமெரிக்க மற்றும் நேசநாட்டுப்படைகள் முற்றாக வெளியேறி, தலிபான்கள் அங்கு ஆட்சியமைத்துள்ள நிலையில், நேசநாட்டுப்படைகளோடு, குறிப்பாக நோர்வே இராணுவத்தோடு நெருக்கமாக பணியாற்றிய ஆப்கானியர்கள் நோர்வேயிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சுமார் 400 ஆப்கானியர்கள் தமது உயிர்களை பாதுகாக்கும்படி நோர்வேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், எனினும், அமெரிக்க மற்றும் நேசநாட்டுப்படைகள் விலகிக்கொள்ள ஆரம்பித்தவேளையில், தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவர்கள் நோர்வே இராணுவத்தோடு நெருக்கமாக செயற்பட்டதற்கான ஆவணங்களை அழித்துவிட்டதால் மேற்படி 400 பேர் தொடர்பிலும் உண்மைத்தன்மையை அறியமுடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்க மற்றும் நேசநாட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியபோது, அவர்களோடு நெருக்கமாக பணியாற்றிய ஏராளமான ஆப்கானியர்களும் கூடவே படைகளோடு சேர்ந்து வெளியேறி ஐரோப்பியநாடுகளிலும், கட்டாரிலும் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இவ்வாறான 360 ஆப்கானியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நோர்வேயில் வதிவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி 400 பேரினது வேண்டுகோள்கள் நோர்வே இராணுவத்தினூடாக நோர்வேயின் வெளியுறவுத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments