துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
பத்திரிகையாளர் “ஜமால் கசோகி” சவுதி அரேபியாவில் துருக்கி தூதரகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகின்றது.
துருக்கியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இறக்குமதி செய்யாமல் தாமதம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் பல்பொருள் அங்காடி கடைகளில் அனைத்து துருக்கி பொருட்களையும் விற்பனை செய்யாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.