கிழக்கில் பிள்ளையான், கருணா , மற்றும் அரச ஆதரவு கட்சிகள் வளர்ந்து வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு பலமான சக்தியாக வழர்ந்து வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை. சாணக்கியன் சிறிலங்கா சுதந்திர கட்சில் போட்டியிட்டிருந்தாலும் கிழக்கில் தமிழ்த்தேசியத்திற்கான அவரது பணிகள் அந்த விமர்சனத்தை மறக்கடிக்க செய்துவிட்டன. இது தூய தமிழ்த்தேசியம் இல்லாவிட்டாலும் தற்போதைய கிழக்கின் சூழ் நிலையில் சாணக்கியன் போன்றோர் அவசியமானவர்கள் தான் என்று நான் உட்பட பலரை சிந்திக்க வைத்தது.
ஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டியின் பின்னரான சாணக்கியனின் “நடவடிக்கைகள் தான் அவரின் உண்மையான முகமா? என்று எண்ண வைக்கின்றது. இந்த பேரணி பல தசாப்தத்திற்கு பின்னர் வடகிழக்கு மக்களை ஒன்றிணைத்த போராட்டமாக இருந்தது. இதனை முன்னின்று நடாத்தியவர்களில் சாணக்கியனின் பங்கும் அளப்பரியது.
ஆனால் இந்த போராட்டம் தொடர்பில் சாணக்கியன் தி மோர்ணிங் மற்றும் தி இந்து என்ற தளங்களிற்கு நேர்காணல்களை வழங்கியிருக்கின்றார்.
அதில்;
இந்த P2P பேரணி ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும், அதனை நோக்கி நடாத்தப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பேரணியை நடாத்த மாட்டோம்.அரசாங்கத்திற்கு மாவட்ட அளவில் அழுத்தம் கொடுக்க கூடிய பொறிமுறையில் தான் பணியாற்றி வருகின்றோம். ஜனநாயக நாட்டில் நாம் செய்யக்கூடியது அவளவு தான்.
நாங்கள் முதலில் பேரணியைத் திட்டமிட்டபோது, தற்போதைய தருணம் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த முடிவு செய்தோம். விடுதலைப் புலிகளை நினைவுகூரும் திட்டம் எதுவும் இல்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கும் நினைவுகூருவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. என்று கூறியிருக்கும் சாணக்கியன்.
புலம்பெயர் மக்களை தீவிரவாத கூறுகள் என்றும் மறைமுகமாக கூறியிருக்கின்றார்.
மக்கள் எந்த கோரிக்கைகளை P2P யின் மூலம் முன்வைத்தார்களோ அதனை சாணக்கியன் மறுத்து அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கவில்லை என்று கூறுகின்றார்.
மக்களோடு மக்களாக ஐந்து நாட்கள் நடந்து போராடிவிட்டு. கண்ணீரோடும், காணாமல் போன தனது மகனின் புகைப்படத்தோடும் நெடிய பாதைகள் ஊடாக கால் கடுக்க நடந்த மக்களை சாணக்கியன் ஏமாற்றியருக்கிறார். பல தசாப்தம் கழித்து நடைபெற்ற மக்களின் ஒன்றிணைவை தனது சுயலாபத்திற்காக சாணக்கியன் பயன்படுத்தியிருக்கிறார்.
இனியாவது தனியொருவரை மக்கள் போராட்டங்களில் முன்னிலைப்படுத்தும் போது நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். சாணக்கியனின் இதே நிலைப்பாடுடன் தான் ஏனையை பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்களா? என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.
சாணக்கியனின் நேர்காணல்கள்.
தி இந்து: https://www.thehindu.com/news/international/a-long-march-in-sri-lanka-to-register-protest-forge-a-new-alliance/article33792547.ece
தி மோர்ணிங்: http://www.themorning.lk/minority-issues-unanswered-for-over-7-decades-shanakiyan-rajaputhiran-rasamanickam/
படங்கள் : பேரணியில் கலந்து கொண்ட மக்கள் சர்வதேச நீதியை கோருகின்றார்கள்.