சிரியா ராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல்: 100 பேர் பலி!

You are currently viewing சிரியா ராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல்: 100 பேர் பலி!

சிரியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மொத்தம் 100 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அரசுக்கும், அந்த நாட்டின் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வலுவான சண்டை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சிரியாவின் ஹோம்சில் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதமேந்திய ட்ரோன்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ட்ரோன் தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ட்ரோன்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வெளியேறிய சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. எனவே இந்த தாக்குதல் பாதுகாப்பு அமைச்சரை குறிவைத்து நடத்தப்பட்டதாக என்று சந்தேகிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply