சிறப்பு தகைமைகளை இழக்கும் பிரித்தானிய இளவரசர் “Andrew”

You are currently viewing சிறப்பு தகைமைகளை இழக்கும் பிரித்தானிய இளவரசர் “Andrew”

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் காரணமாக, பிரித்தானிய இளவரசரான “Andrew” விற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத்தகைமைகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பிரித்தானிய இராணுவத்தால் வழங்கப்பட்ட சிறப்புத்தகைமைகள் திரும்பப்பெறப்பட வேண்டுமென முன்னாள் இராணுவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, பிரித்தானிய மாகாராணியாரால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

” Virginia Giuffre” என்ற பெண்மணி, தனக்கு 17 வயதாக இருந்த போது, இளவரசர் தன்னை பல தடவைகள் பலத்தகாரத்துக்கு உள்ளாக்கியிருந்ததாக வழக்கொன்றை தொடுத்திருந்த நிலையில், அவ்வழக்கை இல்லாமல் செய்வதற்கு இளவரசர் தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பு தகைமைகளை இழக்கும் பிரித்தானிய இளவரசர்
பிரித்தானிய இளவரசர் “Andrew” மற்றும் அவர்மீது வக்கல்லு தொடுத்துள்ள “Virginia Giuffre”

குறித்த பெண்மணியை எப்போதாவது நேரில் சந்தித்ததாக நினைவில்லை என இதுவரை தெரிவித்து வந்த இளவரசருக்கு, அவரும், அவர்மீது வழக்கு தொடுத்துள்ள பெண்மணியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளதால் மேலும் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

இராணுவத்தால் வழங்கப்பட்ட சிறப்புத்தகைமைகள் பறிபோயுள்ள நிலையில், அரச குடும்பத்தின் சிறப்பு உரிமைகளும் இழக்கப்படும் நிலைக்கு வந்துள்ள இளவரசர் “Andrew”, அரச குடும்பத்தவர் என்ற தகைமையை விடுத்து, சாதாரண பிரித்தானிய பிரஜையாக வழக்கை எதிர்கொள்ள வேண்டுமென அரச மாளிகையான “பக்கிங்ஹாம் அரண்மணை” முன்னதாக அறிவித்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments