சிறார்கள் என கூறி பிரித்தானிய நிர்வாகத்தை ஏமாற்றிய 4000 புலம்பெயர்ந்தோர்!

You are currently viewing சிறார்கள் என கூறி பிரித்தானிய நிர்வாகத்தை ஏமாற்றிய 4000 புலம்பெயர்ந்தோர்!

சுமார் 4,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்காக சிறுவர்கள் போல் நடித்து தற்போது பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் சிலருக்கு குறைந்தது 30 வயதிருக்கலாம் என்றும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2020 தொடக்கத்திலிருந்து எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட 8,766 சிறார்களில் சுமார் 45 சதவீதம் பேர் பெரியவர்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 887 பேர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2022ல் மட்டும் 1,582 பேர்கள் சிறார்கள் என கூறி, அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, குடும்பத்தார் துணையின்றி புகலிடம் கோரும் சிறார்களுக்கு கூடுதல் நிதி உதவி அளிக்கப்படுவதுடன் அவர்களுக்கு குடியிருக்க வசதியும் அளிக்கப்படும்.

இந்த உதவிகள் அவர்கள் 25 வயதை எட்டும் வரையில் அனுபவிக்க முடியும். 2022ல் சிறார்கள் என் குறிப்பிட்டு அதிகாரிகளை நாடிய 52 பேர்கள், 30 வயது கடந்தவர்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் 1,361 பேர்கள் ஆப்கானிஸ்தானியர்கள், ஈரானில் இருந்து 612 பேர்கள், சூடானில் இருந்து 550 பேர்கள் என தெரியவந்துள்ளது.

பலரும் இதே ஏமாற்று வேலையில் தொடர்வதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையிலேயே வயது மதிப்பீட்டு செயல்முறையை வலுப்படுத்த இருப்பதாக உள்விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments