சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்து வெற்றிவாகை சூடியநாள்.

You are currently viewing சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்து வெற்றிவாகை சூடியநாள்.

துன்பத்தைத் தந்தவனிற்கே திருப்பிக்கொடு என்று தேசியத்தலைவர் அவர்கள் அடிக்கடி கூறுவார். அந்த சிந்தனையின் அடிநாதமாக, தமிழினத்தின் தன்னிகரில்லாத தலைவரின் திட்டத்திற்கு, கரும்புலிகள் செயல்வடிவம் கொடுதீத நாள் இன்றாகும். ஆம் 2001 ஜூலை 24 எமது மறவர் படை கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினுள் வீராவேசமாக புகுந்து , சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்த வெற்றிவாகை சூடியநாள்.

கறுப்பு யூலை என நாங்கள் கண்ணீருடன் நினைவிற்கொள்ளும், 1983 காலப்பகுதியை , சிங்களம் பயத்துடன் நினைவிற் கொள்ள வைத்த நாள். கரிய வேங்கைகளின் உறுதி நிறைந்த உள்ளக்கிட்க்கைகள் யாரறிவார். இந்தக்கரும்புலி அணியின் பயிற்சிகளின் போது அவர்களின் நகைச்சுவையான செயற்பாடுகளையும், ஈரம் நிறைந்த பாசப்பிணைப்புகளையும் எவரறிவார். கடுமையான பயிற்சிகளின் இறுதிக்காலப்பகுதியில் உயரம் குறைவு என்ற காரணத்தால் ஒரு கரும்புலி வீரன் இந்த தாக்குதல் அணியிலிருந்து அகற்றப்பட்டார். ஏனெனில் சிறிலங்கா விமானப்படையினரின் சாதாரண உயரத்தை விட அவரின் உயரம் குறைவாக இருந்தது.

அந்த வீரனின் கோபமும் ஆதங்கமும் அர்த்தம் நிறைந்தது. யூலை 24 அன்று கட்டுநாயக்கா தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதுதான் அவனுடைய கோபத்தின் உச்சம் வெளிப்பட்டது. தானும் இந்த தாக்குதலில் போயிருக்க வேண்டும் சரிவரவில்லை என்ற ஆதங்கத்தில் அவனுடைய நண்பர்கள் மேல் அவன் கொண்டிருந்த அன்பும் பாசமும் வெளிப்பட்டது. இந்த அணிக்கான பயிற்சி ஒரு கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய தளத்தினுள் நடைபெற்றது. பயிற்சியின் போது நீண்ட தூர நகர்வு இருக்கும் . அந்நாளில் ஓர் நாள் கடற்கரையோரமாக நகர்ந்து சென்ற போது ஆட்டுக்குட்டியொன்று காலில் அடிபட்டுக் கிடந்தது. அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து வந்து சிகிச்சை செய்து, தங்களிற்கு வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பால்மாவில் அந்த வாயில்லா ஜீவனிற்கு பாலூட்டி வளர்த்தார்கள்.

இலக்கை நோக்கி புறப்படும் நாளில் , பயிற்சிமுகாமின் வழங்கல் பொறுப்பாளரிடம். தங்களிடமிருந்த , கைச்செலவிற்கான பணத்தைக் கொடுத்து , அண்ணை குட்டிக்கு பால்வாங்கி வையுங்க அண்ணை என்று சொன்ன போது அவரின் கண்கள் கலங்கியது. உறுதியின் உறைவிடங்களான கரிய வேங்கைகளின் உள்ளத்தின் ஈரம் எவருமறியாமல், இன்னும் ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கிக் கிடக்கின்றது. வாய்விட்டுப் பேர் சொல்லி அழமுடியாமல் தினம்தோறும் செத்துச் செத்து நடைப் பிணங்களாக வாழ்கிறோம். தாக்குதல் நடந்து உள்ளே சென்ற அனைவரும் வீரகாவியம் ஆகிவிட்டார்கள்.தன் எசமானர்கள் வீரச்சாவடைந்ததை அறியாத அந்த ஆட்டுக்குட்டி ஆனந்தமாக பால்குடித்துக் கொண்டிருக்கிறது.

துன்பங்களை எல்லாம் தாங்கள் சுமந்து, இன்பத்தை மட்டுமே எம்மக்களிற்கு வழங்கவேண்டும் என மாவீரர்கள் நினைத்தார்கள். ஆகுதியானார்கள். நாங்கள் அவர்களிற்கு என்ன கைம்மாறு செய்து விட்டோம். அவார்களின்நியாயமான வீரவரலாறுகளை அடுத்த சந்ததியிடம் கையளிக்க தவறிவிட்டோமா அல்லது தோல்வி மனப்பான்மையில் துவண்டு விட்டோமா? வன்னியிலிருந்து தாக்குதலை ஒருங்கிணைத்த தளபதியான கேணல் சாள்ஸ்ஸின் கட்டளைகளை , கட்டுநாயக்காவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த அணித்தலைவன் ஒரு கட்டத்தில் சொல்கிறான் அண்ணை கொடுத்த இலக்குகளை அழித்துவிட்டோம் வேற என்ன? எந்தவித பதட்டமுமில்லாத தெளிவான உரையாடல், சாள்ஸ் அவர்கள் நீண்ட நாட்களாக இந்த உரையாடல்களை சொல்லிக் கொண்டேயிருப்பார். அவரும் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்து விட்டார்.

எவ்வளவு நிதானம் துணிவு, வீரம். இந்த வரலாற்றை என்றைக்கு நாங்கள் சொல்லபீபோகிறோம். நெஞ்சு கனக்கிறது. இந்தக்காவியங்களின் கதையை எழுதும் போது, கைத்தொலைபேசியின் தொடுதிரையில் கண்ணீர் தாரையாக கொட்டுகிறது. ஓ,,,, கரும்புலி வீரர்களிற்கான காணிக்கை இதுதானோ? சிங்கள வான்படைத்தளத்தினுள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த எமது வீரர்களின் உடல்களை முகம் தேடி அடுத்த நாள் அடையாளம் கண்டு கொண்டோம் ஆ,,,, இது சு-ர். ஆ ,,, இது க–ன். வாழ்க்கை முழுக்க உங்களின் புகழ்பாடினாலும் ஆறாது எங்கள் நெஞ்சம். எம் மக்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் உயிர்கொல்லி வான்கலங்களைத் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கைகளிற்கு எமது வீரவணக்கங்கள்!

சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்து வெற்றிவாகை சூடியநாள். 1
சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்து வெற்றிவாகை சூடியநாள். 2
சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்து வெற்றிவாகை சூடியநாள். 3
சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்து வெற்றிவாகை சூடியநாள். 4
சிறிலங்காவின் 28 வான்கலங்களை தகர்த்து அழித்து வெற்றிவாகை சூடியநாள். 5
பகிர்ந்துகொள்ள

Leave a Reply