சிறிலங்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை மீளவும் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், வெளிநாட்டவர்களை வைத்து பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், வெளிநாட்டவர்கள் கொரோனா தடுப்பு சிகிச்சை முறைகளை பின்பற்றினாலும் அவர்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நிலையை கருத்தில்கொண்டே அவர்களை திருப்பி அனுப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறிலங்காவில் சுமார் 38 ஆயிரம் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கின்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.