இலங்கையில் 2019 இல் மனித உரிமைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் காணப்பட்டன என அமெரிக்கா தனது அறிக்கையி;ல் தெரிவி;த்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் சட்டவிரோத படுகொலைகள் முன்னெடு;க்கப்பட்டுள்ளன,அரச முகவர்கள் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளனர்,கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் நியாயப்படுத்த முடியாத விதத்தில் கைதுசெய்யப்படுவது,சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது,போன்றன காணப்படுகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் தொடர்ந்தும் பொதுமக்களை துன்புறுத்துகின்றனர் என தனது மனித உரிமை அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்கா, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரை பொறுப்புக்கூறச்செய்வதற்கான பொறிமுறையை உருவாக்கவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை விடு;த்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மோதல்கள் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களிற்கான பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது, சிவில் சமூக அமைப்புகள் அரசாங்கமும் நீதித்துறையினரும் படையினரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகின்றன என குறிப்பிட்டுள்ளன எனவும் அமெரிக்கா தெரிவி;த்துள்ளது.
மனித உரிமை அமைப்பினர் மேற்கொண்ட பேட்டிகளின் போது சித்திரவதைகளும் அளவுக்கதிகமான பலப்பிரயோகமும் காணப்படுவது தெரியவந்துள்ளது என அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கண்மூடித்தனமாக கைதுசெய்து தடுத்துவைத்தலும் தொடர்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.