சிறிலங்கா காவல் துறை நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு!

You are currently viewing சிறிலங்கா காவல் துறை நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு!
மருதங்கேணி காவல் துறை நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன் என  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன் தொடர்புகொள்ள முடியவில்லை பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டவாளர் சுகாஸ் தெரிவிக்கையில்…

தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் கட்டுக்கடங்காத வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்திரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட  அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து நாங்கள் மீள்வதற்கு முன்னர்  இன்று காலை எமது கட்சியினுடைய வடமராட்சி மகளிர் அணித் தலைவி அருள்மதி கைது செய்யப்பட்டுள்ளார்.   எந்த காரணமும் இன்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சிறீலங்கா காவற்துறையினர் அச்சுறுத்தும் பொழுது அதனை வீடியோ எடுத்ததுதான் அவர் செய்த வேலை. மேலும்,  அன்று சிறீலங்கா காவற்துறையினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுட முயலும் பொழுது அதனைக் கண்டு எச்சரிக்க முயன்ற உதயசிவமும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சுகாஸ்  குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments